Header Ads

Bougival : நீரில் மூழ்கி ஐந்து வயதுச் சிறுமி பலி

 


Bougival (Yvelines) நகரில் உள்ள பூங்கா ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

சனிக்கிழமை பிற்பகல் இச்சம்பவம் La Chaussée பூங்காவில் இடம்பெற்றுள்ளது. தண்ணீர் சாகச நிகழ்ச்சி ஒன்றை தனது சகோதரனுடன் (வயது 7) பார்வையிட்டுக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி ஒருவர் தவறி ஆற்றில் விழுந்துள்ளார்.



உடனடியாக சகோதரன் தனது தந்தைக்கு தகவலை அறிவித்துள்ளான். தந்தை தண்ணீரில் பாய்ந்து மகளைத் தேடியுள்ளதுடன், தீயணைப்பு படையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் 30 நிமிடங்களின் பின்னர் சிறுமி தண்ணீருக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. 


No comments

Powered by Blogger.