Header Ads

🔴 குறைந்த விலையில் TGV InOui மற்றும் Intercités பயணச்சிட்டைகள் விற்பனை

 


கோடைகால பயணச்சிட்டைகளை இதுவரை முன்பதிவு செய்யாதவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தியினை SNCF அறிவித்துள்ளது.

இன்று ஜூலை 31 மற்றும் நாளை ஓகஸ்ட் 1 ஆம் திகதி ஆகிய இரு நாட்களும் குறைந்த விலையில் தொடருந்து பயணச்சிட்டைகளை விற்பனை செய்ய உள்ளது. €29 - €39 மற்றும் €49 யூரோக்கள் விலையில் TGV InOui மற்றும் Intercités பயணச்சிட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மொத்தமாக 300,000 பயணச்சிட்டைகள் இந்த மலிவு விலை மூலமாக விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.



முன்னதாக இளைஞர்களுக்காக ஜூலை 15 ஆம் திகதி முதல் ஜூலை 31 ஆம் திகதி வரை €19 யூரோக்களுக்கு 200,000 பயணச்சிட்டைகள் விற்பனைக்கு விடப்பட்டிருந்தது. அதன் அனைத்து பயணச்சிட்டைகளும் விற்பனையாகி நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்த புதிய பயணச்சிட்டைகள் மலிவு விலைக்கு SNCF நிறுவனம் அறிவித்துள்ளது.  

No comments

Powered by Blogger.