ஜொந்தாமினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
ஜொந்தாம் அதிகாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். Isbergues (Pas-de-Calais) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை இங்குள்ள நகர்ப்பகுதி ஒன்றில் மோதல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து ஜொந்தாமினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மோதலில் ஈடுபட்ட ஒருவர் வாள் ஒன்றினால் ஜொந்தாமினரை தாக்க முற்பட்டுள்ளார்.
அதையடுத்து ஜொந்தாம் அதிகாரி ஒருவர் குறித்த நபரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
துப்பாக்கி சன்னம் மார்பில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
No comments