Header Ads

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை: அமைச்சர் கஞ்சன விடுத்துள்ள அறிவிப்பு

 போதுமான கையிருப்பைப் பேணாத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 101 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்று ஒக்டேன் 92 ரக பெட்ரோல் கையிருப்பில் இருக்கவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனைத் தவிர மேலும் 61 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதுமான ஒட்டோ டீசல் கையிருப்பும் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

விலைத் திருத்தங்களை எதிர்பார்த்தே எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.

போதியளவு கையிருப்பு வைத்திருக்கும் வகையில் எரிபொருளை முற்பதிவு செய்யுமாறு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் உரிய முறையில் கையிருப்பை பேணாத எரிபொருள் நிரப்பு நிலையங்கள், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.