கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் துப்பாக்கிச் சூடு: இளைஞர் பலி
வாழைத்தோட்டம் மாடிஸ் ஒழுங்கையில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
No comments