தரிந்து உடுவரகெதர கைது: மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணை
இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் தரிந்து உடுவரகெதர கைது செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பொரளையில் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போது அவர் கைது செய்யப்பட்டார்.
தரிந்து உடுவரகெதர நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
No comments