தண்டவாளத்தில் விழுந்த பெண் - படுகாயம்
தண்டவாளத்தில் விழுந்த பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.
Oberkampf மெற்றோ நிலையத்தில் இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு 2 மணி அளவில் குறித்த மெற்றோ நிலையத்தில் தொடருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவர், தண்டவாளத்தில் விழுந்துள்ளார். République மற்றும் Place d'Italie நிலையங்களுக்கிடையே பயணித்த தொடருந்தில் அவர் மோதுண்டு படுகாயமடைந்தார்.
தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு அவர் மீட்க்கப்பட்டார். உயிருக்கு போராடும் நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் இலக்க மெற்றோவின் இன்று அதிகாலை சிலமணிநேரம் தடைப்பட்டது
No comments