பிரெஞ்சு மக்கள் மீதான தாக்குதல்களை ஒருபோதும் பிரான்ஸ் சகித்துக்கொள்ளாது - ஜனாதிபதி கடும் கண்டனம்
பிரெஞ்சு மக்கள் மீதோ, பிரெஞ்சு இராணுவத்தினர் அல்லது அதிகாரிகள் மீதோ தாக்குதல்கள் மேற்கொள்வதை அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோம் தெரிவித்துள்ளார்.
நைகர் நாட்டில் ஏற்பட்டுள்ள் உள்நாட்டு குழப்பங்கள் தொடர்பாக இந்த எச்சரிக்கையை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். அந்நாட்டு ஜனாதிபதி பாஸூமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு இராணுவ தளபதி தம்மை புதிய ஆட்சியாளராக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த உள்நாட்டு விவகாரத்தில் பிரான்ஸ் தலையிட்டுள்ளது. இன்று அங்குள்ள பிரெஞ்சு தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. நைகரில் தற்போது 600 வரையான பிரெஞ்சு மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் மீது தாக்குதல்கள் பதிவாகலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையிலேயே ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இதனைத் தெரிவித்தார்.
No comments