ஒலிம்பிக் 2024 : பிரான்ஸ் தேர்வானது எப்படி..?
அடுத்த ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது யார் என்கிற போட்டியில் பல நாடுகள் இருந்தன.
அதில் Paris, Hamburg, Rome, Los Angeles, Budapest போன்றவையும் அடங்மும். பல நாடுகள் போட்டியில் இருந்து ஒதுங்கிவிட, இந்த நாடுகள் ( நகரங்கள் ) மட்டும் போட்டியில் நீடித்தன.
சர்வதேச ஒலிம்பிக் அமையத்தின் 131 ஆவது கூட்டத்தொடர் பெரு தலைநகர் லீமாவில் கடந்த 2017 இல் நடந்தது. இறுதி முடிவும் அங்குதான் எடுக்கப்பட்டது.
இறுதிச்சுற்றில் எல்லா நாடுகளும் விலகிவிட கடைசியில் பிரான்ஸும் அமெரிக்காவும் மட்டுமே போட்டியில் இருந்தன. எனவே 2024 ஐ பரிசிடம் ஒப்படைப்பதென்றும் 2028 அமெரிக்காவுக்கு எனவும் அப்போது தீர்மானிக்கப்பட்டது.
அதன்படியே அடுத்த ஆண்டு கோலாகல கோடை ஒலிம்பிக் போட்டிகளை பிரான்ஸ் நடத்தப்போகிறது. இதற்கான மொத்த செலவீனம் €8.3 பில்லியன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
புதினங்கள் தொடரும்..!
No comments