வன்முறைகளைத் தொடர்ந்து இயற்கையாலும் பேரழிவு!!
பிரான்சின் ஓரு வாரத்திற்கும் சற்று முன்னதாக, பெரும் வன்முறைகளால் பேரழிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று சனிக்கிழமை, பெருமழை புயற்காற்றினால், பிரான்சின் மத்திய கிழக்கு மாகாணம் (centre-est) பெரும் சேதத்திற்கு உள்ளாகி உள்ளது.
வானிலை மையத்தினால் சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்ட பத்திற்கும் மேற்பட்ட மாவட்டங்களில், பாரிய மரங்கள் முறித்து எறியப்பட்டு, கூரைகள், வாகனங்கள், வீதிகள் எனப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
Saône-et-Loire இலுள்ள மசோன் (Mâcon) நகரம் அதியுச்சப் பாதிப்பிற்கும் சேதத்திற்கும் உள்ளாகி உள்ளது.
பல்பொருள் பேரங்காடிகள் கடும் சேதமடைந்துள்ளன.
Ain இலுள்ள பெந்ந்-து-வோ (Pont-de-Vaux) நகரத்தில் உள்ள, மற்றவர்கள் துணையின்றி வாழ முடியாத முதியவர்கள் மையமான EHPAD இலிருந்த முதியவர்கள் 41 பேர் உடனடியாக அவசர முதலுதவிப் படையினால் சேதப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள
No comments