🔴மதுபோதை - குழந்தையுடன் அதியுச்ச வேகத்தில்!!
14ம் திகதி தேசிய தினத்தன்று Haute-Savoie மாகாணத்திலுள்ள ஜோன்சியே-எப்பான்யே (துழணெநைச-Épயபலெ) நகரத்தில் உள்ள பிராந்திய சாலையில் (Jonzier-Épagny) மது போதையில் ஒருவர் அதியுச்ச வேகத்தில் சென்றுள்ளார். தேசிய தினத்தில் அதியுச்ச குற்றங்கள்;, வன்முறைகள் பல அரங்கேறி உள்ளன.
அதியுச்ச வேகமாக மணிக்கு 80 கிலோமீற்றர் வேகம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள சாலையில், இவர் மனிக்கு 131 கிலோமீற்றர் வேகத்தில் சென்றுள்ளார். அதாவது அங்கீகரிக்கப்பட்ட அதியுச்ச வேகத்தைவிட 51 கிலோமீற்றர்கள் அதிகமாக இவர் சிற்றுந்து செலுத்தியிருந்த நிலையில் ஜோந்தார்ம் படையினரால் மடக்கி நிறுத்தப்பட்டுள்ளார்.
அதிர்ச்சியூட்டும் வகையில் இந்தச் சிற்றுந்தினுள் இவரது பிள்ளையும் இருந்துள்ளது.
அத்துடன் இவரது சுவாசத்தில் வெளியேற்றப்படும் காற்றில் ((mg/l d’air expiré) லிட்டரிற்கு 0.87 மில்லிகிராம் அளவிற்கு அல்ககோல் இருந்துள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட அதியுச்ச அளவான வெளியேற்றப்படும் காற்றில் லிட்டரிற்கு 0.25 மில்லிகிராமிற்கு மூன்று மடங்கிற்கும் அதிகமாகவே இவர் போதையில் இருந்துள்ளார்.
உடனடியாகவே இவரது வாகனச்சாரதிப்பத்திரமஜோந்தார்மினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட ஆணையத்தின் தீர்ப்பின் பின்னரே எவ்வளவு காலத்திற்கு இவரது வாகனச்சாரதிப் பத்திரம் இரத்துச் செய்யப்படுகின்றது என அறிய முடியும்
No comments