வன்முறைத்தாக்குதல் - படுகாயம் !!
புதன்கிழமை இரவு பிரான்சு வடக்குப் பகுதியில் கொடுமையான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
Vieux-Condé என்னும் இடத்தில் 72 வயது முதியவர் மூவர் தாக்கியுள்ளனர். குடிபோதையிலிருந்த மூவர் வீதியில் சத்தம் போட்டதால் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் அவர்மீது வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்டது. காவல்துறையின் விசாரணையின் பின் 14,17 மற்றும் 18 வயதான மூவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வன்முறைக்குள்ளானவர் தாடையிலும் முகத்திலும் படுகாயமடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
No comments