Header Ads

ireworks, fireworks mortars இவற்றை தேடி அகற்றும் கடமையில் காவல்துறை....

 



பொதுமக்களுக்கும் ஏன் இயக்குபவர்களுக்கும் கூட ஆபத்தான fireworks, fireworks mortars இவற்றை தேடி அகற்றும் கடமையில் காவல்துறை....

 
 
நேற்றையதினம் France info வானொலி நிலையத்திற்கு நேரடியாக சென்றிருந்த
(Préfet de Police de Paris) பாரிஸ் காவல்துறை தலைமை அதிகாரி Laurent Nuñez
 
பொதுமக்களுக்கும், பொது உடமைகளுக்கும்,  ஏன் அதனை இயக்குபவர்களுக்கும் கூட ஆபத்தான (fireworks )   வானவேடிக்கைப் பொருட்கள் மற்றும் அதனை இயக்கும் (fireworks mortar) மோட்டார் போன்றவற்றை காவல்துறையினர் தேடிக் கண்டு பிடித்து அகற்றிவருவதாகத் தெரிவித்தார்.
 
இந்த வானவேடிக்கை பொருட்கள்
 கடைகளில் அங்கிகரிக்கப் படாத முறையில் விற்பனை செய்யப்படுவதாகவும், 
Germany, Spain, Belgium, போன்ற நாடுகளில் இருந்து களவாக கடத்தி வரப்படுவதாகவும், இணையத்தளங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். 
 
இத்தகைய பொருட்களை கண்டுபிடித்து அகற்றவும், வைத்திருப்போரை
கைதுசெய்வும் தமக்கு உள்துறை அமைச்சர் பணிப்பு விடுத்திருப்பதாகவும் 
தெரிவித்த காவல்துறை அதிகாரி Laurent Nuñez
 
கடந்த வாரம் Nanterre பகுதியில் 
காவல்துறை அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்ட Nahel M என்னும் 17 வயது இளைஞனின் மரணத்தின் பின்னர்
France முழுவதும் வெடித்த கலவரத்தில் 
அரச பொதுக் கட்டிடங்கள், கடைகள், பல்பொருள் அங்காடிகள், 
காவல்துறையினர் மீது கலவரக்காரர்கள் இத்தகைய  பொருட்களை பாவித்தே
 தாக்குதல்களை நடத்தினர் எனவும் தெரிவித்தார் .
 
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14/07/2023)
பிரான்ஸ் தேசத்தின் சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. 
இந்த நிகழ்வுகளில் கலவரக்காரர்கள் இத்தகைய தாக்குதல்களை நடத்தக் கூடும் என்பதால் 
அதன் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
 
fireworks, fireworks mortars என்பனவற்றை 
சட்ட விரோதமாக வைத்திருப்பது, விற்பனை செய்வது இன்றைய நிலையில் 
ஆபத்தானது.

No comments

Powered by Blogger.