Header Ads

வீதி விபத்துக்களில் 3,267 பேர் கொல்லப்பட்டுள்ளனர்! - உள்துறை அமைச்சகம் தகவல்!!



 வீதி விபத்துக்களில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதன்படி கொவிட் 19 பரவல் காலத்தின் போது வீழ்ச்சியடைந்திருந்த பலி எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.



சென்ற 2022 ஆம் ஆண்டில் 3,267 பேர் பிரான்சில் வீதி விபத்துக்களில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் சமப்படுகிறது. 2019 ஆம் ஆண்டில் 3,244 பேர் வீதி விபத்துக்களில் கொல்லப்பட்டிருந்தனர்.

கொவிட் 19 பரவல் காலமான 2021 ஆம் ஆண்டில் 2,944 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

சென்ற ஆண்டில் கொல்லப்பட்டவர்களில் 549 பேர் 18-24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

***

அதேவேளை, சென்ற ஆண்டில் 236,834 பேர் வீதி விபத்துக்களில் காயமடைந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


No comments

Powered by Blogger.