பிரான்சில் 200,000 குழந்தைகளுக்கான பராமரிப்பு நிலையங்கள் உருவாக்கம்!!
குழந்தைகளுக்கான பராமரிப்பு நிலையங்களுக்கான (crèches) தேவை அதிகளவு நிலவுவதை அடுத்து, 200,000 குழந்தைகளுக்குரிய மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
100,000 குழந்தைகளுக்கான நிலையங்களை வரும் 2027 ஆம் ஆண்டுக்குள்ளும், அடுத்த 100,000 குழந்தைகளுக்கான நிலையங்களை 2030 ஆம் ஆண்டுக்குள்ளும் உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு 10,000 குடும்பங்களைக் கொண்ட நகராட்சிகளுக்கும் ஒரு பராமரிப்பு நிலையம் (crèches) உருவாக்கப்பட உள்ளது.
பிரான்சில் தற்போது 458,000 குழந்தைகளுக்கான பராமரிப்பு நிலையங்களே உள்ளன. இவற்றில் குழந்தைகளை பராமரிக்கும் தொழில் வல்லுனர்கள் அல்லது முறைப்படி பயின்றவர்கள் 49% சதவீதமானவர்கள் என அரசு கணக்கிட்டுள்ளது.
இந்த பின்னடைவுகளை சரிசெய்யும் நோக்கில் €5.5 பில்லியன் யூரோக்கள் செலவில் மேற்படி திட்டத்தினை அரசு உருவாக்கியுள்ளது.
No comments