இத்தாலிய ஜனாதிபதி பிரான்ஸ் வருகை!!
இத்தாலிய ஜனாதிபதி Sergio Mattarella பிரான்சுக்கு வருகை தர உள்ளார். எலிசே மாளிகையில் வைத்து பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனைச் சந்திக்க உள்ளார்.
அகதிகள் தொடர்பான இத்தாலியின் இறுக்கமான நிலைப்பாட்டை கடுமையாக பிரான்ஸ் விமர்சித்திருந்தது. இரு நாடுகளுக்கும் இடையே வாய்த்தர்க்கம் போல் நீடித்த முறுகலை அடுத்து இந்த சந்திப்பு இடம்பெறுவதால், மிக முக்கியமான சந்திப்பாக இது கருதப்படுகிறது.
இத்தாலிய ஜனாதிபதி இம்மாதம் 7 ஆம் திகதி பரிசுக்கு வருகை தர உள்ளதாக நேற்று புதன்கிழமை எலிசே மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எலிசே மாளிகையில் இடம்பெறும் இந்த சந்திப்பதைத் தொடர்ந்து இருவரும் உணவு விருந்துபசாரத்தில் கலந்துகொள்வார்கள் எனவும் அறிய முடிகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவைப் பேணும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments