எல்லைப் பாதுகாப்பு! - துனிசியா நாட்டுக்கு 26 மில்லியன் நிதியுதவி அளித்த பிரான்ஸ்!!
அகதிகளின் சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த துனிசியாவுக்கு பிரான்ஸ் தரப்பில் கிட்டத்தட்ட 26 மில்லியன் யூரோக்கள் பணம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பல வருடங்களாக ஆபிரிக்காவில் இருந்து துனிசியாவுக்கு அகதிகள் படையெடுத்து வருகின்றனர். பின்னர் அங்கிருந்து பிரான்சுக்குள் நுழைகின்றனர். இதனால் பிரான்ஸ்-துனிசியா நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார்.
25.8 மில்லியன் யூரோக்கள் பணம் வழங்கப்பட்டதாகவும், எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த துனிசியாவுக்கு இந்த தொகை உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், இங்கிலாந்து பிரதமர் பிரான்சுக்கு வருகை தந்திருந்தபோது ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனைச் சந்தித்தார். பின்னர் இருவரும் பிரான்சில் இருந்து இங்கிலாந்து நோக்கி கடல் மார்க்கமாக செல்லும் அகதிகளை தடுத்து நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(புகைப்படத்தில் துனிசிய ஜனாதிபதி Kaïs Saïed மற்றும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gérald Darmanin)
No comments