இல்-து-பிரான்சில் இடி மின்னல் - மின்வெட்டு!!
ஞாயிற்றுக்கிழமைக்கும் திங்கட்கிழமைக்கும் இடையில் இல்-து- பிரான்சைத் தாக்கிய இடியுடன் கூடிய பெருமழையின் காரணமாக பெரும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
இல் 11.000 வீடுகளிற்கு மின் வெட்டு ஏற்பட்டுள்ளதாக பிரன்சின் மின் வழ்ஙகல் வலையமைப்பான் RTE (réseau de transport d'électricité) தெரிவித்துள்ளது.
மின்சார துறையினரின் மிகவும் துரிதமான நடவடிக்கையால் மிக வேகமாக இந்த வீடுகளிற்கான மின்சாரம் மீள்வழங்கப்பட்டது.
இதே நேரம் பல மின் கம்பங்களின் பாதிப்பால் தொடருந்துச் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் SNCF அறிவித்துள்ளது.
No comments