Header Ads

RER களில் நெருக்கடி - மெட்ரோக்கள் தொடர்ந்து இயக்கம்!!



இன்றைய பணிப்புறக்கணிப்பு பொதுப் போக்குவரத்துக்களைப் பாதித்துள்ளது. இல்-து-பிரான்சிற்குள் இந்தப் போராட்த்தின் பாதிப்பு பொதுப் போக்குவரத்துக்களை ஓரளவு பாதித்துள்ளது. பிராந்திய வீதிகளிலும் நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.



இருப்பினும் எதிர்பார்த்த அளவு மோசமில்லாமல் ஓரளவிற்குப் பொதுப் போக்குவரத்துகள் இயங்கி வருகின்றன.

K இலக்கத் தொடருந்துகள் மற்றும் T1 மற்றும் T3 ட்ராம் சேவைகளும் வழமை போல் சாதாரணமாக இயங்குகின்றன.

RER A மற்றும் P தொடருந்து சேவைகள் நான்கிற்கு மூன்று எனவும்

RER E ஐந்திற்கு மூன்று எனவும்

T4 ஒவ்வொரு 15 நிமிடங்களிற்கு ஒன்று எனவும்

RER B , RER C ஆகியவை இரண்டிற்கு ஒன்று எனவும் 

RER D மூன்றிற்கு ஒன்று எனவும் 

U தொடருந்து சேவைகள் மூன்றிற்கு இரண்டு எனவும் 

இயங்குகின்றன. 

RER B மற்றும் RERD னு ஆகியவை கார்-து-நோர்திலும் இடைநிறுத்தப்படாமல் தொடர்ச்சியாக இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்ககது. 

பரிசிற்குள் மெட்ரோ சேவைகள் வழமை போல் சாதாரணமாகவே இயங்குகின்றன


No comments

Powered by Blogger.