Header Ads

பேரழுத்தத்தில் அரசாங்கம்!! வலுக்கும் மக்கள் எதிர்ப்பு!!



!அதிக விலையேற்றம் மற்றும் மக்களின் கொள்வனவுத் திறனிழப்பு ஆகியவற்றிற்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் போராட்டத்தில் இறங்கி 48 மணிநேரத்திற்குள், மீண்டும் ஒரு பாரிய பணிப்புறக்கணிப்பு மற்றும் பெரும் போராட்டத்தினை மக்ரோன் அரசு சந்தித்துள்ளது. இது அரசாங்கத்திற்கு பெரும் அழுத்த்தத்தினை ஏற்படுத்தி உள்ளது.


CGT, FO ஆகிய பெரும்


தொழிற்சங்கங்கள் இன்று இந்தப் பேரணிக்கும் பணிப்புறக்கணிப்பிற்கும் அழைப்பு விடுத்திருந்தன.

ஊதியப் பற்றாக்குறை மற்றும் அரசின் வலுக்கட்டாயமான சட்ட அமுலாக்கம் ஆகியவற்றிற்கு எதிராக இந்தப் போராட்டம் வலுத்துள்ளது.

போக்குவரத்து உட்பட அனைத்துப் பிரிவு ஊழியர்களையும் இணைத்து இந்தப் போராட்டம் இன்று ஆரம்பித்துள்ளது. இன்று 18ம் திகதி அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டம் தொடர்ந்து நீடிக்கலாம் எனவும் தொழிற்சங்கங்கள் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தொடருந்துச் சேவைகள் உட்பட அனைத்துப் போக்குவரத்துகளும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளையே இன்று வழங்குகின்றளன. இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் தொழிற்துறை அமைச்சரே தற்போதைய பிரதமராக இருக்கும் நிலையிலும், தொழிலாளர்கள் போராட்டத்திற்கு எந்த விதமான தீர்வுகளும் வழங்கப்படாமல் இருப்பது பெரும் மோசமான நிலையை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Powered by Blogger.