Header Ads

பாடசாலைகளில் இஸ்லாமிய மதவாதம் - எச்சரிக்கும் உள்துறை அமைச்சர்!!

 


கொலேஜ் லிசே போன்றவற்றிலும் ஏனைய கல்வி நிறுவனங்களிலும் பிரான்சின் மதச்சார்பின்மை சிதைக்கப்படுவதாகவும் இதனைத் தடுக்க உடனடியாகக் கடுமையான நடவடிக்கையில் இறங்குமாறும் மாவட்ட ஆணையர்களிற்கு உள்துறை அமைச்சர் ஜெரால்ட தர்மனன் மற்றும் குடியுரிமை மற்றும் குடிமக்களிற்கான இராஜாங்கச் செயலாளர் சோனியா பெக்கே ஆகியோர் அவசர ஆணையைப் பிறப்பித்துள்ளனர்.



«முக்கியமாக இந்தக் கல்வியாண்டு ஆரம்பத்தில் இருந்து இஸ்லாமியவாதம் பிரெஞ்சு தேசத்தின் மதச்சார்பின்மையைச் சிதைக்க ஆரம்பித்துள்ளது. பாடசாலை மாணவர்களிடம் இஸ்லாமிய மதவாத ஆடைகளை அணியுமாறு இளைஞர்கள் வற்புறுத்தி வருகின்றனர்»

«இதனால் 2004 ஆம் ஆண்டின் சட்டத்தினை உடனடியாகச் செயற்படுத்த வேண்டும். இதனை மிகக் கண்டிப்புடனும் உறுதியுடனும் செயற்படுத்த வேண்டும். இந்தச் சட்டம் பாடசாலைகளில் மதவாத ஆடைகளை அணிவதைத் தடைசெய்துள்ளது»

«இந்தக் கல்வியாண்டு ஆரம்பத்தில் இருந்து லிசேக்களிலும் கொலேஜ்களிலும் பெருமளவில் இந்தச் சட்டமீறல் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேண்டுமென்றே இஸ்லாமிய மதவாத ஆடையணிந்து வந்து மதச்சார்பின்மைனயை மீறியதுடன் பிணக்குகளையும் பெருமளவில் ஏற்படுத்தி உள்ளனர்»

எனத் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர்,  இதனைத் தடுப்பதற்கான சட்டத்தினை மாவட்ட ஆணையர்களும் கல்வித் திணைக்களங்களும் அமுல்படுத்தி உடனடியாகக் கடுமையான  நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்ற ஆணையை வழங்கி வலியுறுத்தி உள்ளா


No comments

Powered by Blogger.