தொடருந்துக்குள் சிகரெட் புகைத்த இளைஞனுக்கு கத்திக்குத்து!!
தொடருந்துக்குள் சிகரெட் புகைத்த இளைஞன் ஒருவன் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. Seine-et-Marne மாவட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சனிக்கிழமை மாலை ligne P தொடருந்தில் பயணித்த 22 வயதுடைடைய இளைஞன், தொடருந்தில் வைத்து சிகரெட் புகைத்துள்ளான். இதனால் தொடருந்தில் பயணித்த மற்றுமொரு நபருக்கும் குறித்த இளைஞனுக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. சிகரெட்டினை அணைக்கும் படி அவர் ஆக்ரோஷமாக சொல்ல, இருவருக்குமிடையே கைகலப்பானது.
பின்னர் தொடருந்தில் பயணித்த பயணிகள் இச்சம்பவத்தில் தலையிட்டு மோதலை தடுத்தனர்.
அதன்பின்னர், குறித்த இளைஞன் La Ferté-sous-Jouarre தொடருந்து நிலையத்தில் இறங்கியதும், வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரும் அதே நிலையத்தில் இறங்கினார். பின்னர் சிறிய கத்தி ஒன்றின் மூலம் குறித்த இளைஞனை சரமாரியாக தாக்கியுள்ளார்.
மூன்று இடங்களில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான இளைஞன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தாக்குதல் நடத்திய நபர் தப்பி ஓடியுள்ளார்
No comments