Header Ads

ஈரானில் சிறைவைக்கப்பட்டுள்ள ஐந்து பிரெஞ்சுக்காரர்களை விடுவிக்க கோரிக்கை..!

 


ஈரானில் சிறைவைக்கப்பட்டுள்ள ஐந்து பிரெஞ்சுக்காரர்களை உடனடியாக விடுவிக்க ஈரானிடம் கோரப்பட்டுள்ளது.



ஈரானில் உள்நாட்டு கலவரம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அங்கு வசிக்கும் ஐந்து பிரெஞ்சு குடியுரிமை கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிக்கும் படி, பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் (la ministre des Affaires étrangères) Catherine Colonna கோரியுள்ளார்.

 ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சரை தொடர்புகொண்ட அவர், இந்த கோரிக்கையை முன் வைத்தார்.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் நால்வரது விபரங்கள் மட்டுமே கிடைக்கப்பட்டுள்ளதாகவும், அடையாளம் காணப்படாத ஐந்தவது நபரையும் விடுவிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.  


No comments

Powered by Blogger.