🔴 எரிபொருள் தட்டுப்பாடு! - உடனடி தீர்வு காணாவிட்டால்.. அரசு தலையிடும் என எச்சரிக்கை!!
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டு பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணாவிட்டால் நிறைவேற்று அதிகாரம் தலையிடும் என அரசு எச்சரித்துள்ளது.
TotalEnergies நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த இரு வாரகாலமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. CGT தொழிற்சங்க ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ‘இரு தரப்பும் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடி தீர்வினை எட்டவேண்டும். அவ்வாறு இல்லையென்றால் நிறைவேற்று அதிகாரம் நேரடியாக தலையிடும்!’ என அரச ஊடகப்பேச்சாளர் OIivier Véran எச்சரித்துள்ளார்.
‘எரிபொருள் விநியோகத்தை மீள ஆரம்பிக்க தேவையான அனைத்து வழிகளையும் அரசு கையாளும்..!’ எனவும் OIivier Véran தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள மூன்றில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எரிபொருள் கிடைக்கும் நிலையங்களிலும் மிக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துள்ளன. எரிபொருள் தடுப்பாடு பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், 15 ஆவது நாளாக மீண்டும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அதையடுத்தே உடனடி தீர்வு காணாவிட்டால் அரசாங்கம் நேரடியாக தலையிடும் என OIivier Véran அறிவித்துள்ளார்
No comments