Header Ads

🔴 அவதானம் : குறுந்தகவல் மூலம் புதிய மோசடி!!



பிரான்சில் குறுந்தகவல் மூலம் புதிய வகை மோசடி ஒன்று இடம்பெறுவதாகவும், அது தொடர்பாக பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.



Crit'Air ஒட்டிகள் (stickers) இனை அடிப்படையாக கொண்டு இந்த மோசடி இடம்பெறுகிறது. Crit'Air எனப்படுவது மக்கள் பயன்படுத்தும் வாகனங்கள் வெளியிடும் மாசடவைக் அடிப்படையாக கொண்டு வகைப்படுத்த பயன்படும் ஒட்டிகளாகும். மாதத்தில் சில நாட்கள் நெருக்கடியாக நகரங்களில் (பரிஸ், மார்செ மற்றும் லியோன் போன்ற பெரு நகரங்கள்) அதிக மாசை வெளியிடும் வாகனங்களுக்கு மேற்படி Crit'Air இனை அடிப்படையாக கொண்டு தடை விதிக்கப்படும்.

இந்நிலையில், மேற்படி ஒட்டிகளை அடிப்படியாக கொண்டு சில மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

உங்கள் தொலைபேசிகளுக்கு குறுந்தகவல் மூலம் ‘உங்களது Crit'Air இனை புதுப்பிக்க வேண்டும்// பதிவு செய்யப்படவில்லை/// கட்டணம் செலுத்தப்படவில்லை ‘ போன்ற காரணங்கள் தெரிவிக்கப்பட்டு, பணம் செலுத்த கோரப்படுகிறது. பின்னர் உங்களது வங்கி கணக்கு தகவல்களை கோரி அதில் இருந்து பணம் கொள்ளையிடப்படுகிறது.


No comments

Powered by Blogger.