Header Ads

🔴 தீவிரமடையும் எரிபொருள் தட்டுப்பாடு! - அவசர தேவையுடைய வாகனங்களுக்கு மட்டும் எரிபொருள்!!



Île-de-France மாகாணத்துக்குள் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டு, அவசர தேவையுடைய வாகனங்களுக்கு மட்டும் எரிபொருட்கள் வழங்கப்பட உள்ளது.



இல்-து-பிரான்ஸ் மாகாணத்தின் எட்டு மாவட்டங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இந்த அறிவித்தலை காவல்துறையினர் வழங்கியுள்ளனர். Essonne மற்றும் Val-d'Oise மாவட்டங்களில் இந்த கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிய முடிகிறது. நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் வாகனங்கள், நோயாளர் காவு வண்டிகள், தீயணைப்பு வாகனக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்களுக்கு முன்னுரிமை அளித்து எரிபொருள் வழங்கும் படி கோரப்பட்டுள்ளது.

அதேவேளை, ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் குறைந்தது 30% வீத எரிபொருளினை கையிருப்பு வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், தற்போது நிலமை மேலும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை 🔴 விசேட செய்தி : பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பு..!

பிரான்சில் பெற்றோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

பெற்றோல் (SP95-E10) ஒரு லிட்டர் 7.3 சதத்தினால் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு லிட்டர் பெற்றோலின் விலை €1.591 யூரோக்களுக்கு விற்பனையாகிறது.

அதேவேளை, டீசல் ஒரு லிட்டர் 10.8 சதங்களினால் அதிகரித்துள்ளது. தற்போது டீசல் ஒரு லிட்டர் €1.803 யூரோக்களுக்கு விற்பனையாகிறது.

பிரான்சில் எரிபொருட்களின் தட்டுப்பாடு ஏற்கனவே தலைப்புச் செய்தியாகியுள்ள நிலையில், தற்போது இந்த விலையேற்றம் இடம்பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி பிரான்சில் 30% வீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எரிபொருள் கிடைக்கும் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நிற்கின்றன. எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கலால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, அரசு மற்றும் TotalEnergies நிறுவனம் அறிவித்துள்ள விலைக்கழிவுகள் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.