சிறுபான்னமையினரை அகற்றுங்கள் - பிரதமர்!!
இன்றைய போராட்டங்களை கண்டித்து உரையாற்றிய பிரதமர் எலிசெபத் போர்ன் பிரான்சில் இன்னமும் 25 சதவீத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் மற்றும் டீசல் முற்றாக இல்லாத பற்றாக்குறை நிலவுகின்றது என்பதைத் தெரிவித்துள்ளார். இது கடந்த வாரம் 30 சதவீதமாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
«Hauts-de-France மாகாணத்தில் 55சதவீதப் பற்றாக்குறை நிலவிய நிலையில் இன்று அது 18.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இல்-து-பிரான்சிற்குள் புதிய விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது»
நிறுவன ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு தொழிற்சங்கங்களுடன் ஒப்பந்தங்கள் தயாராகி உள்ளன. இருப்பினும் சிறுபான்மை ஊழிர்களால் இன்னமும் சுத்திகரிப்பு மற்றும் வைப்பு நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ளன»
«உடனடியாக மாவட்ட ஆணையர்களிற்கு மாற்றுத் தொழிலாளர்களை மாற்றீடு செய்து இந்த எரிபொருள் வைப்பு நிறுவனங்களை இயங்கவைக்க வேண்டும்»
எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். தொழிலாளர் நலனிற்காகப் போராடவேண்டிய பிரதமர் போராடும் தொழிலாளர்களை அகற்றுமாறு பணித்திருப்பது, இது முதலாளிகளிற்கான அரசு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
TotalEnergies நிறுவனத்தின் Mardyck (Nord), Feyzin (Rhône) ஆகியவற்றிடம் விநியோகத்திற்கான புதிய கோரிக்கைகளை அரசாங்கம் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments