Header Ads

இன்றைய போராட்டத்தில் மூன்று இலட்சம் மக்கள் - தொடரும் கைதுகள்!



இன்று நடாத்தப்பட்ட போராட்டங்களில் நாடுதழுவிய ரீதியில் 300.000 பேர் கலந்து கொண்டுள்ளனர் என CGT தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இதில் பரிசில் மட்டும் 70.000 பேர் கலந்து கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வழமைபோல் உள்துறை அமைச்சகம் இன்றைய போராட்டங்களில் நாடு தழுவிய ரீதியில் வெறும் 107.000 பேர் மட்டுமே கலந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளது. அரசாங்கம் போராட்டங்களில் கலந்து கொள்பவர்களைப் பெருமளவில் குறைத்துக் கூறி பிரச்சாரப் பலத்தை உடைப்பது வழமை.

 இன்றைய போராட்டங்களில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவற்துறையினர் 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 


No comments

Powered by Blogger.