பணிப்புறக்கணிப்பில் பேராசிரியர்கள் பங்கு!!
ஓகஸ்ட் 18ம் திகதி நடாத்தப்பட்ட பல்தொழில் முறையாளர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பங்கும் பெருமளவில் இருந்துள்ளது.
தேசியக் கல்வித் திணைக்களத்தின் தரவின்படி, இன்று மொத்த தேசியக்கல்வித்துறையின் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் என 5.67 சதவீதமானோர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் தேசியக் கல்வியமைச்சின் தரவின்படி மொத்தமாக 6.04 சதவீதமானோர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் முறை உயர்கல்விப் பள்ளிகளான Lycées professionnels இல் பெருமளவு பணிப்புறக்கணிப்பு கடைப்பிடிக்கப்பட்டதாகவும், தொழில் முறை உயர்கல்விப் பள்ளிகளின் 22.94 சதவீத பேராசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் எனவும் கல்வியமைச்சுத் தெரிவித்துள்ளது.
இது தேசிய அளவிலான 6.04 சதவீதத்திற்குள் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments