Header Ads

🔴 எரிபொருள் தட்டுப்பாடு! - அமைச்சர்கள் இன்று இரவு அவசர சந்திப்பு!!



நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், இன்று இரவு அமைச்சர்கள் சிலர் கலந்துகொள்ளும் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது.



பிரதமர் மாளிகையில் இந்த சந்திப்பு, இன்று ஒக்டோபர் 11ஆம் திகதி இரவு, 9 மணி அளவில் இடம்பெற உள்ளது. இந்த சந்திப்பில் உள்துறை அமைச்சர் Gérald Darmanin, எரிசக்தி அமைச்சர் Agnès Pannier-Runacher, போக்குவரத்து துறை அமைச்சர் Clément Beaune மற்றும் ஊடக பேச்சாளர் Olivier Veran ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

பிரதமர் Elisabeth Borne இந்த சந்திப்பில் *கலந்துகொள்கிறார்.

இந்த சந்திப்பில் அவசரகால தீர்வு ஒன்றை எட்டப்படும் எனவும், இன்று இரவே இது தொடர்பாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் கடந்த 12 நாட்களாக TotalEnergies ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், எரிபொருளை விநியோகிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பல நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


No comments

Powered by Blogger.