கொலை செய்யப்பட்ட லோலாவின் பெற்றோர்களைச் சந்தித்த ஜனாதிபதி மக்ரோன்!!
பரிசில் படுகொலை செய்யப்பட்ட லோலா எனும் சிறுமியின் பெற்றோர்களை செவ்வாய்க்கிழமை காலை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சந்தித்தார்.
Élysé மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Collège Georges-Brassens கொலெஜில் பயிலும் 12 வயதுடைய சிறுமி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இக்கொலை வழக்கில் நேரடியாக தொடர்புடைய 24 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர்களை சந்தித்த ஜனாதிபதி அவர்களுக்கு தனது இரங்கல்களையும் ஆதரவினையும் தெரிவித்தார்.
லோலாவின் கொலைச் சம்பவம் பரிஸ் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை அச்சிறுமிக்கான பேரணி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
*லோலா கொலை வழக்கு! - சிறையில் அடைக்கப்பட்ட பெண் கொலையாளி!!*
லோலா எனும் 12 வயதுடைய சிறுமியை கொலை செய்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டுள்ள பெண் கொலையாளி, இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Dahbia B எனும் 24 வயதுடைய பெண்ணே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இக்கொலை சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட Dahbia B, முதல்கட்ட விசாரணைகளின் பின்னர் அவர் Fresnes சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
லோலா எனும் 12 வயதுடைய சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பாலியல் சித்திரவதைக்குள்ளான குறித்த சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கொலை வழக்கில் Dahbia B எனும் பெண் கொலையாளி முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
*லோலா - அதிர்ச்சியின் உச்சத்தில் அமைதிப் பேரணி!!*
கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட 12 வயதுச் சிறுமியான லோலாவின் உடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் கொலையாளி எனச் சந்தேகிக்கப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தச் சிறுமியின் வதிவிடமான பரிஸ் 19 இன் மக்கள் இன்னமும் இந்த அதிர்ச்சியி;ல் இருந்து விடுபடவில்லை. பலர் இன்னனமும் உளவியல் பாதிப்பில் உள்ளனர்.
இந்தச் சிறுமியின் சக மாணவர்கள் மற்றும் அந்த கொலேஜ் மாணவர்கள் பலரும் அதிரச்சி நீங்கா நிலையில் உள்ளனர். அவர்களிற்கான உளவியல் ஆற்றுப்படுத்தல் மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதன்கிழமை மாலை 15h00 மணிக்கு வெள்ளைப் பேரணி எனப்படும் அமைதிப் பேரணி ஆரம்பிக்கப்பட்டு பரிஸ் 19இன் நகரசபை முன்னாள் குழுமி நினைவுவணக்கம் செய்ய உள்ளதாக அப்பகுதி மக்களாலும் மாகநகர சபையினாலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments