Header Ads

முன்னர் எப்போதும் இல்லாத அளவு வறண்ட நாடாக மாறிய பிரான்ஸ்! - அவசரகால நடவடிக்கை!!

 


பிரான்ஸ் முன்னர் எப்போதும் இல்லாத அளவு வறட்சியான நாடாக மாறியுள்ளது. இதற்கு எதிராக அவசரகால நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் Elisabeth Borne அறிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை காலை பிரதமர் Elisabeth Borne தெரிவிக்கையில், “இந்த வறட்சி முன்னர் எப்போதும் இல்லாத அளவு ஆபத்தானதாக மாறியுள்ளது. இது அடுத்த 15 நாட்களுக்கு தொடரும். இன்னும் நிலமை மோசமடையும்!” என குறிப்பிட்டார். இந்த வறட்சியை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ‘மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிக்கவும், அங்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், செயற்கை நீரூற்றுகள் போன்றவற்றை அமைக்கும் திட்டங்களை செயற்படுத்தவும் சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது!’ என பிரதமர் தெரிவித்தார்.

குறிப்பாக பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படக்கூடாது என்பதில் கரிசனை கொண்டுள்ளதாகவும் பிரதமர் இன்று வெள்ளிக்கிழமை காலை தெரிவித்தார்.

ஜூன் ஜூலை மாதங்களில் பதிவான மிக குறைந்த மழைவீழ்ச்சியே இந்த வறட்சிக்கு காரணமாகும். பிரான்சில் தற்போது 93 மாவட்டங்கள் வறண்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 62 மாவட்டங்கள் அதிகபட்ச வறட்சியை அடைந்துள்ளன.

அதேவேளை, தலைநகர் பரிஸ் மற்றும் இல் து பிரான்சின் சில மாவட்டங்களும் விரைவில் வறண்ட மாவட்டங்களாக மாறும் அபாயம் உள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.