பரிஸ் : சென் நதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் மீட்பு!
சென் நதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. வெடிகுண்டுகள் அனைத்தும் இரண்டாம் உலக யுத்தத்தைச் சேர்ந்தவை என அறிவிக்கப்பட்டுள்ளது
நேற்று ஓகஸ்ட் 5, வெள்ளிக்கிழமை இந்த வெடிகுண்டு மீட்கும் பணி இடம்பெற்றது. பரிஸ் 13 ஆம் வட்டாரத்தின் quai d'Austerlitz பகுதியில் உள்ள சென் நதியில் இந்த பணி இடம்பெற்றது. மொத்தமாக 154 வெடிகுண்டுகள் அங்கிருந்து மீட்கப்பட்டன.
இன்று சனிக்கிழமை இரண்டாவது நாளாகவும் மீட்புப்பணி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இரும்பினை அடையாளும் காணும் கருவி ஒன்றின் மூலம் ஆற்றின் அடிப்பகுதியில் புதைந்திருக்கும் பொருட்கள் சிலவற்றை மீட்பு குழுவினர் மீட்டிருந்தனர். அதன்போது ஆற்றுக்குள் வெண்டிகுண்டுகள் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் முடிவிலேயே மேற்படி மீட்பு பணி இடபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments