அணு ஆலை வெடிக்கும் ஆபத்து! - உக்ரைன் ஜனாதிபதியுடன் உரையாடிய இம்மானுவல் மக்ரோன்!
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelensky உடன் உரையாடியுள்ளார்.
தொலைபேசியூடாக இடம்பெற்ற இந்த உரையாடலில், சில முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. குறிப்பாக, இரஷ்ய துருப்புக்கள் உக்ரைனில் உள்ள Zaporijjia அணு ஆலையினை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலினால் அணு ஆலை வெடித்துச் சிதறி பாரிய ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தும் என சுட்டுக்காட்டிய மக்ரோன், இது தொடர்பாக சில ‘இரகசிய’ ஆலோசனைகளையும் முன்வைத்ததாகவும் அறிய முடிகிறது.
இராஜதந்திர நடவடிக்கையாக உக்ரைனிய இராணுவத்தினரை பின்வாங்கும் படி மக்ரோன் கோரியதாகவும் அறிய முடிகிறது.
இந்த தொலைபேசி உரையாடல் ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் நீடித்ததாக அறிய முடிகிறது.
இரஷ்யா-உக்ரைன் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து பலதடவைகள் மேற்குறித்த இரு நாடுகளின் ஜனாதிபதிகளுடனும் மக்ரோன் உரையாடியிருந்தமையும், உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky இனை நேரில் சென்று சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments