பரிசில் பெய்து வரும் மழை காரணமாக பல மெற்றோ நிலையங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. பல நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
மாலை 5.30 மணி முதல் பரிசில் மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் ஆலங்கட்டியுடன் கூடிய மழையும், சில பகுதிகளில் புயல் காற்றுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது.
பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Balard மெற்றோ நிலையத்துக்குள் வெள்ளம் புகுந்துள்ளதை அடுத்து, நிலையம் மூடப்பட்டுள்ளது.
Alma-Marceau நிலையத்தின் 9 ஆம் இலக்க மெற்றோ சேவைகளும் தடைப்பட்டுள்ளன.
கடும் மழையை அடுத்து J வழிச் சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக பரிசில் இருந்து Saint-Lazare நிலையம் வரை போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டு இயங்கி வருகிறது.
14 ஆம் வட்டாரத்தில் உள்ள Montsouris நிலையமும் மூடப்பட்டுள்ளது. இங்கு கடந்த ஒருமணிநேரத்தில் 27 மில்லிலீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அதேவேளை, ஈஃபிள் கோபுரத்தின் உச்சியில் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் புயல் அளவிடப்பட்டுள்ளது.
15 ஆம் வட்டாரத்தின் சில இடங்களில் ஆலங்கட்டி மழை பதிவாகியுள்ளது. சில இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.
🔴 சீரற்ற வானிலை! - வெள்ள அபாய எச்சரிக்கை!
சீரற்ற வானிலை காரணமாக இன்று காலை ஐந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில்ம் தற்போது எந்த எச்சரிக்கை எட்டு மாவட்டங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Tarn, Aveyron, Aude, Hérault, Gard ஆகிய ஐந்து மாவட்டங்களுடன் தற்போது Vaucluse, Bouches-du-Rhône மற்றும் Var ஆகிய மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு பலத்த இடி மின்னல் தாக்குதல் மற்றும் கடும் மழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்படுள்ளது.
குறிப்பாக Hérault மற்றும் Gard ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை புதன்கிழமை வரை விடுக்கப்பட்டுள்ளதாக Météo-France தெரிவித்துள்ளது.
No comments