Header Ads

மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞன் பலி!!

 


மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட 19 வயதுடைய இளைஞன் ஒருவன் பலியாகியுள்ளான்.



இச்சம்பவம்  செவ்வாய்க்கிழமை மாலை மார்செ (Marseille) நகரில் இடம்பெற்றுள்ளது. குறித்த 19 வயதுடைய இளைஞன் ஒருவன் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணித்து சாகசத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் இருந்த தூணில் மோதி விபத்துக்குள்ளானான்.

இச்சம்பவத்தில் குறித்த இளைஞன் படுகாயமடைந்ததை அடுத்து, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவன் பலியாகியுள்ளான்.

அவ் இளைஞனிடம் மோட்டார் சைக்கிள் செலுத்துவதற்குரிய ஓட்டுனர் உரிமம் இல்லை எனவும், விபத்துக் காப்பீடும் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மார்செயின் 11 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் நேற்றிரவு 9.20 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.  

மோட்டார் சைக்கிள் சாகசம்! - காவல்துறையினர் தீவிர நடவடிக்கை! - 338 பேர் கைது!

அனுமதியின்றி சட்டவிரோதமாக இடம்பெறும் மோட்டார் சைக்கிள் சாகசத்தினை தடுப்பதற்காக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2,900 சோதனைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் 2,914 சோதனை நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 157 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி தகவல்களை உள்துறை அமைச்சர் Gerald Darmanin இன்று தெரிவித்துள்ளார்.

பிரான்சில் சட்டவிரோதமாக இடம்பெறும் இவ்வகை மோட்டார் சைக்கிள் பந்தயங்களினால் இதுவரை ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்ச்சம்பவத்தை அடுத்து, உள்துறை அமைச்சர் இந்த சாகசங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். அதையடுத்து மிக கடுமையான சோதனை நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுவருவதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்


No comments

Powered by Blogger.