இந்தியப் பிரதமருடன் இணைந்து பணியாற்றும் இம்மானுவல் மக்ரோன்!!
இரஷ்ய-உக்ரைன் யுத்தம் தொடர்பில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுடன் இணைந்து பணியாற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் 16, செவ்வாய்க்கிழமை நரேந்திரமோடியுடன் மக்ரோன் தொலைபேசியூடாக உரையடினர்.
இந்த உரையாடலில், இரஷ்ய-உக்ரைன் தொடர்பில் பிரதானமாக கலந்துரையாடப்பட்டது. இதில் உக்ரைனில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்த, பிரான்சுடன் இணைந்து தாம் பணியாற்ற தயாராக இருப்பதாக நரேந்திர மோடி தெரிவித்ததாக அறிய முடிகிறது.
முன்னதாக, கடந்த மே மாதத்தில் நரேந்திர மோடி பிரான்சுக்கு வருகை தந்து, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுடன் சந்திப்பு மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments