Header Ads

பிரான்சில் எரிபொருள் விலை வீழ்ச்சி!

 


பிரான்சில் எரிபொருட்களின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

டீசல் ஒரு லிட்டரின் விலை 4.9 சதத்தினால்




வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சியின் பின்னர் தற்போது ஒரு லிட்டர் டீசல் €1.79 யூரோக்களுக்கு விற்பனையாகிறது.

பெற்றோல் (SP95-E10) ஒரு லிட்டரின் விலை 5.8 சதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த விலைவீழ்ச்சியை அடுத்து, தற்போது ஒரு லிட்டர் பெற்றோல் €1.736 யூரோக்களுக்கு விற்பனையாகிறது.

தொடர்ச்சியான எட்டாவது வாரமாக டீசலின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஜூன் 17 ஆம் திகதி ஒரு லிட்டர் டீசல் €2.1345 யூரோக்களுக்கு விற்பனையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments

Powered by Blogger.