🔴 Foire du Trône : விபத்தில் ஊழியர் பலி!!
நேற்று நள்ளிரவு Foire du Trône விளையாட்டு திடலில் ஏற்பட்ட விபத்தொன்றில் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த விளையாட்டுத் திடலில் சிறுவர்களை ஏற்றிச் செல்லும் சிறிய பெட்டிகளைக் கொண்ட தொடருந்து ஒன்று (roller coaster) அங்கு பணி புரியும் ஊழியர் ஒருவர் மீது மோதியுள்ளது. இதில் அவரது தலை நசுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
விபத்தின் போது குறித்த தொடருந்து பெட்டிகளில் 7 சிறுவர்கள் இருந்ததாகவும், அவர்கள் தீவிர மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களில் சிலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து நள்ளிரவு 12.25 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. Crazy Mouse வேடமணிந்து சிறுவர்களை மகிழ்விக்கும் ஒருவரே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தை அடுத்து கேளிக்கை விடுது உடனடியாக மூடப்பட்டது.
No comments