Header Ads

Aulnay-sous-Bois : நூதன விளையாட்டு மூலம் பணம் பறித்த மூவர் கைது!

 


நூதன விளையாட்டு மூலம் சுற்றுலாப்பயணிகளிடம் பணம் பறித்த மூவரை Aulnay-sous-Bois இல் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

வியாழக்கிழமை இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. “Bonneteau” 
என அழைக்கப்படும் நூதனமாக ஏமாற்று விளையாட்டு ஒன்றின் மூலம் இவர்கள் பலரை ஏமாற்றியுள்ளதாகவும், குறிப்பாக ஈபிள் கோபுரத்தை பார்வையிடவரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை இலக்கு வைத்து ஏமாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டின் மூலம் சுற்றுலாப்பயணிகள் அறியாத வண்ணம் இலகுவாக அவர்களை ஏமாற்றி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை Drancy மற்றும் Aulnay-sous-Bois பகுதிகளில் அம்மூவரையும் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் இருவர் ஆண்கள் எனவும் ஒருவர் பெண் எனவும் அறிய முடிகிறது. அதேவேளை, இரண்டு ஆடம்பர மகிழுந்துகள் - €16,000 ரொக்கப்பணம் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர் எனவும் அறிய முடிகிறது.  

No comments

Powered by Blogger.