Header Ads

🔴 இம்மானுவல் மக்ரோனின் பதவியேற்பு விழா! - செய்திகளின் தொகுப்பு!!


இம்மானுவல் மக்ரோன் மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழ்வு தற்போது ஆரம்பித்துள்ளது. நிகழ்வுகள் தொடர்பான முழு தகவல்களையும் இந்த இணைப்பில் படிக்கலாம்!

**

ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வு நிறைவடைந்தது.
**

இராணுவ தளபதியுடன் சந்திப்பு!

தேசிய கீதத்தின் பின்னர், எலிசே மாளிகையின் தோட்டப்பகுதிக்குச் சென்ற மக்ரோன் - அங்கு அணிவகுத்து நின்ற இராணுவ வீரர்களைச் சந்தித்தார். பின்னர் இராணுவ தளபதிகள் - ஆயுதப்படைகளின் தலைவர் போன்றோரைச் சந்தித்தார்.

அதன் பின்னர் மக்ரோன் எலிசே மாளிகைக்குள் சென்றார்.
***

பீரங்கி குண்டுகள் முழக்கம்!

சிறப்பு விருந்தினர்களுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு இம்மானுவல் மக்ரோன் எலிசே மாளிகையில் முற்றத்தில் வருகை தந்தார். அப்போது Hotel des Invalides பகுதியில் பீரங்கி குண்டுகள் முழக்கப்பட்டன. 21 தடவைகள் பீரங்கி குண்டுகள் முழக்கப்பட்டன.

அதன் பின்னர், இம்மானுவல் மக்ரோன் தேசிய கீதம் (La Marseillaise) ஒலிக்க தேசிய கொடிக்கு அருகே நின்று மரியாதை செலுத்தினார்.
**

கண்ணீர்!

பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டிருந்த பேராசிரியர் Samuel Paty-ன் பெற்றோர்களை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சந்தித்தார். அவர்களுடன் உரையாடும் Samuel Patyஇன் பெற்றோர்கள் கண் கலங்கினார்கள். மக்ரோன் அவர்களுக்கு தமது ஆறுதலை தெரிவித்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபரில் Samuel Paty பயங்கரவாத தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

***

தவறு!

மக்ரோன் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையை அரசியலமைப்புச் சபையின் தலைவர் Laurent Fabius குறிப்பிடும் போது, பிழையாக குறிப்பிட்டார்.

மக்ரோன் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையை அவர் குறிப்பிடும் போது, சில நொடிகள் மெளத்துக்குப் பிறகு 18,678,639 வாக்குகளை மக்ரோன் பெற்றதாக அவர் தெரிவித்தார். ஆனால் உண்மையில் மக்ரோன் 18,768,639 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

****

சந்திப்பு!

ஜனாதிபதி உரையை அடுத்து இம்மானுவல் மக்ரோன் சிறப்பு விருந்தினர்களுடன் சந்திப்பை மேற்கொண்டார். அவர்களது வருகைக்கு நன்றி தெரிவித்து - அவர்களிடம் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டார். முன்னாள் ஜனாதிபதிகள் பிரான்சுவா ஒலோந்து மற்றும் நிக்கோலா சர்கோஷி ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

முன்னாள் பிரதமரும் - மக்ரோனின் நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமான எத்துவா பிலிப் உடன் கைகுலுக்கி கொண்டார். அவரை கண்டதும் மக்ரோன் மிகவும் உணர்ச்சிபூர்வமாகி கைகளை இறுக பற்றிக்கொண்டார்.

**

மக்ரோன் உரை!!

முழுக்க முழுக்க புதிய ஜனாதிபதியாக தாம் இருப்பேன் எனவும், புதிய மக்கள் இதே ஜனாதிபதியை நம்பி மீண்டும் அடுத்த ஐந்து ஆண்டுகளை கையளித்துள்ளனர் என மிக உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார்.

***


 இம்மானுவல் மக்ரோன் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 58.55% வீத வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டார். இன்று ஏப்ரல் 7 ஆம் திகதி சனிக்கிழமை ஜனாதிபதியில் எலிசே மாளிகையில் அவர் மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்கிறார்.

பிரெஞ்சு அரசியலமைப்புச் சபையின் தலைவர் Laurent Fabius சற்று முன்னர் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை பிரான்சின் புதிய ஜனாதிபதியாக பிரகடனம் செய்தார். “நீங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிரெஞ்சு குடியரசின் சனாதிபதியாக பிரகரனப்படுத்தப்படுகிறீர்கள்!” என அவர் தெரிவித்தார்.

 

அதையடுத்து, இம்மானுவல் மக்ரோன் அரச ஆவணத்தில் கையெழுத்திட்டு ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அடுத்ததாக, அரசியலமைப்புச் சபையின் தலைவர் Laurent Fabius கையெழுத்திட்டார்.

*****

சிறப்பு கெளரவிப்பு!


சற்று முன்னதாக, இம்மானுவல் மக்ரோனுக்கு சிறப்பு கெளரவம் ஒன்று அளிக்கப்பட்டது. ‘இரண்டாவது முறையாக மக்ரோன் ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டதினால் அவரை கெளரவிக்கும் முகமாக Légion d'Honneur எனும் சிறப்பு தங்கத்திலான மாலை ஒன்று அவருக்கு வழங்கப்பட்டது.

முழுக்க முழுக்க தங்கத்திலான இந்த மாலை 952 கிராம் எடை கொண்டது.

***

 

No comments

Powered by Blogger.