Header Ads

கொரோனா தொற்றுக்குள்ளான - Valérie Pécresse..!

 


ஜனாதிபதி வேட்பாளர் Valérie Pécresse கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை அவர் மேற்கொண்ட பரிசோதனையில் ‘நேர்மறை’ முடிவு வந்துள்ளதை அடுத்து, அவர் சுயமாக தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இதனை தனது டுவிட்டர் கணக்கில் உறுதிப்படுத்திய Valérie, வீட்டில் இருந்தவாறே தாம் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Républicain கட்சி வேட்பாளரான இவர், அண்மைய கருத்துக்கணிப்பின் படி, அதிகவாக்குகள் பெறும் வேட்பாளர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கொரோனா வைரஸ் : தற்போதைய நிலவரம்!

பிரான்சில் கிட்டத்தட்ட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் பிரான்சில் பதிவான கொரோனா தொற்று மற்றும் சாவு விபரங்களை பொது சுகாதார துறை வெளியிட்டுள்ளது.

புதிதாக 147,635 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் 20,654 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர். இவர்களில் 1,564 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறனர்.

அதேவேளை, இந்த 24 மணிநேரத்தில் 112 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர். பிரான்சில் இதுவரை கொரோனா தொற்றினால் 142,443 பேர் சாவடைந்துள்ளனர்.

 



No comments

Powered by Blogger.