கொரோனா வைரஸ் : தற்போதைய நிலவரம்!
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நாளாந்த தொற்று வீதம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. செப்டம்பர் மாத ஆரம்பத்தில் கொரோனா தொற்று 2,6% வீதமாக இருந்த நிலையில், தற்போது 1,1% வீதமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,057 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரான்சில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 7,090,109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் தற்போது 6,468 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 20 பேரால் அதிகமாகும். இவர்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 1,049 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த 24 மணிநேரத்தில் 41 பேர் சாவடைந்துள்ளனர். மொத்த சாவு எண்ணிக்கை 117,306 பேராக உயர்வடைந்துள்ளது.
*****
தடுப்பூசி!
இதுவரை 51,096,875 பேர் தங்களுக்கான முதலாவது கொரோனா தடுப்பூசியினை போட்டுக்கொண்டுள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 75,8% வீதமாகும்.
அதேவேளை, 49,581,680 பேர் தங்களது இரண்டாவது தடுப்பூசியினையும் போட்டுக்கொண்டுள்ளனர். இது மொத்த நாட்டு மக்களின் தொகையில் 73,5% வீதமாகும்.
*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*
............................................................
பிரான்ஸில் இருந்து தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம் தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.
தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு subscribers பண்ணுங்கள் !!*
உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .
👇
https://www.youtube.com/c/THAAIMAN
*நன்றி*
No comments