Header Ads

Yvelines : தொடருந்தில் சிக்குண்டு ஒருவர் சாவு! - நான்கு மணிநேரம் தொடருந்துக்குள் சிக்கிய பயணிகள்!



ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தொன்றில் 70 வயதுடைய ஒருவர் சாவடைந்துள்ளார். விபத்தை அடுத்து நான்கு மணிநேரங்கள் போக்குவரத்து தடைப்பட்டது.

Bonnières-sur-Seine (Yvelines) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 800 பயணிகளுடன் பயணித்த TER தொடருந்து ஒன்று 70 வயதுடைய ஒருவரை மோதி தள்ளியது. திடீரென தண்டவாளத்துக்கு முன்பாக அவர் வந்ததால் விபத்தை தவிர்க்க முடியவில்லை. இது ஒரு தற்கொலை முயற்சியாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தை அடுத்து, மீட்ட்புக்குழு, தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தை முற்றுகையிட, போக்குவரத்து தடைப்பட்டது. தொடருந்துக்குள் சிக்குண்டு சாவடைந்தவரின் உடலம் மீட்க்கப்பட்டது.

தொடருந்து நான்கு மணிநேரம் போக்குவாத்து தடைப்பட்டது. தொடருந்துக்குள் பயணிகள் பலமணிநேரம் சிக்கி தவித்தனர். பின்னர் தொடருந்தில் இருந்த பயணிகளில் 500 பேர் வரை சிறப்பு பேருந்துகளில் தங்களது இலக்கு நோக்கி அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமானவர்கள் தொடருந்தை விட்டு வெளியேறினர்.

விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  

*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*

............................................................

பிரான்ஸில் இருந்து  தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம்  தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.

 தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு  subscribers பண்ணுங்கள் !!*

உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .

👇

https://www.youtube.com/c/THAAIMAN

*நன்றி*



No comments

Powered by Blogger.