சுட்டுக் கொன்று நதியில் வீசப்பட்ட அல்ஜீரியர்களது நினைவேந்தலில் மக்ரோன் பங்குகொண்டு அஞ்சலி!
"மன்னிக்க முடியா குற்றம்" என்கிறது
எலிஸே மாளிகை விடுத்த அறிக்கை
1961 இல் பாரிஸ் பொலீஸாரால் படு
கொலை செய்யப்பட்ட அல்ஜீரிய ஆர்ப்
பாட்டக்காரர்களின் அறுபதாவது நினை
வேந்தல் நிகழ்வில் அதிபர் மக்ரோன்
கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தி
யிருக்கிறார்.
பாரிஸ் நகரின் மத்தியிலும் புற நகரங்
களிலும் அமைதியாகப் பேரணி நடத்திய
அல்ஜீரிய நாட்டவர் மீது நிகழ்த்தப்பட்ட
மிக மோசமான இந்தப் படுகொலை, உலகப் போருக்குப் பின்னரான பிரான்
ஸின் வரலாற்றில் ஓர் இருண்ட அத்தியா
யமாகக் கொள்ளப்படுகிறது.
நினைவேந்தல் நிகழ்வில் பிரான்ஸின்
அதிபர் ஒருவர் பங்குபற்றுவது இதுவே
முதல் முறை ஆகும். அல்ஜீரியப் போருக்
குப் பின்னர் பிறந்த முதலாவது அதிபர்
என்ற வகையில் மக்ரோனின் பிரசன்னம்
கடந்த கால வரலாறு மீதான புதிய தலை
முறையின் அணுகுமுறையாகவும் நோக்
கப்படுகிறது.
அல்ஜீரியர்கள் பலர் சுடப்பட்டு செய்ன் நதியில்(Seine) வீசப்பட்டதன் நினைவிடங்
களில் ஒன்றாகிய 'பெஸோன்ஸ்' என்ற பாலத்தில் (pont de Bezons) அதிபர் மக்ரோன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பெஸோன்ஸ் பாலம் பாரிஸின் புறநக
ராகிய Colombes பகுதியில் - பாரிஸ் நகரையும் இல் து பிரான்ஸ் பிராந்தியத்
தையும் குறுக்கறுத்துச் செல்லும் செய்ன் நதி மீது- அமைந்துள்ளது. மக்ரோன் அவ்விடத்தில் நேற்று அஞ்சலி செலுத்
திய பிறகு உரை எதனையும் ஆற்றவில்
லை. ஆனால் சிறிது நேரத்தில் எலிஸே மாளிகையில் இருந்து அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டது.
இந்தப் படுகொலைகளை"மன்னிக்க முடி
யாத ஒரு குற்றம்" என்று அந்த அறிக்கை
கூறியுள்ளது. "அன்றைய இரவில் பாரிஸ்
பொலீஸ் அதிகாரி மொறிஸ் பப்போன் (Maurice Papon) தலைமையில் இழைக்கப்
பட்ட குற்றங்கள் குடியரசால் மன்னிக்க
முடியாதவை" (les crimes commis cette nuit-là sous l'autorité de Maurice Papon sont inexcusables pour la République") என்று
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
🔴படுகொலையின் பின்னணி என்ன?
பிரான்ஸின் காலனி ஆதிக்கக் காலப்
பகுதியில் அல்ஜீரிய மக்களது சுதந்திரப் போராட்டத்துக்குஎதிராக அந்த மண்ணில் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் போரை எதிர்த்த பிரான்ஸ் வாழ் அல்ஜீ
ரிய நாட்டவர் மீது பாரிஸில் புரியப்பட்ட
இரக்கமற்ற படுகொலைகளே "1961 பாரிஸ் படுகொலைகள்" என்று அழைக்
கப்படுகிறது.
1961 இல் அல்ஜீரிய சுதந்திரப் போர்
முடிவுக்கு வந்த இறுதிக் கால கட்டத்தில்
அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி
யின் (National Liberation Front),பிரான்ஸ் பிரிவினரால் பாரிஸில் பல இடங்களில்
ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்காக "அல்ஜீரிய முஸ்லீம்களுக்கு மட்டுமான" ஊரடங்கு உத்தரவை அன்றைய பாரிஸ் பொலீஸ் தலைமைத்தளபதி மொறிஸ் பப்பொன் (Maurice Papon) என்பவர் அமுல் செய்திருந்தார்.
பாரிஸிலும் சூழவுள்ள இடங்களிலும்
ஊரடங்கை மீறி ஒன்று கூடிய ஆண்கள்
பெண்கள் அடங்கிய அல்ஜீரியர்கள்
இனப்பாகுபாடு காட்டும் ஊரடங்கு உத்
தரவுக்குத் தங்கள் எதிர்ப்பை அமைதி
யான வழிமுறைகளில் வெளிப்படுத்த
முயன்றனர். பாரிஸ் பொலீஸ் தளபதி மொறிஸ் அந்த எழுச்சியை அடக்கி ஒடுக்
குமாறு உத்தரவிட்டார்.
சுமார் 30-40 ஆயிரம் அல்ஜீரியர்கள்
பங்கு பற்றிய பேரணிகளைப் பொலீஸ்
இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது . ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்
யப்பட்டு முகாம்களில் தள்ளப்பட்டனர்.
பொலீஸார் இறப்பர் ரவைகளுக்குப் பதிலாக நிஜமான குண்டுகளைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது
சுட்டனர். ஒக்ரோபர் 16-17 ஆம் திகதி இரவில் பல டசின் கணக்கான அல்ஜீரி
யர்கள் படுகொலை செய்யப்பட்டு செய்ன் நதிக்குள் மூழ்கடிக்கப்பட்டனர்.
பாரிஸ் நகரின் மத்தியில் புகழ்பெற்ற
சென் மிஷல் தேவாலயத்தின் அருகே
அமைந்துள்ள சென் மிஷல் பாலத்தில்
வைத்து பலர் சுடப்பட்டும், கைகளைக் கட்
டியும் நதியில் வீசப்பட்டனர் என்பதை
நேரில் கண்டவர்கள் பின்னர் உறுதிப்
படுத்தினர்.
பொலீஸ் வன்முறைகளில் ஆக மூன்று பேர் மட்டுமே உயிரிழந்தனர் என்று உத்தியோகபூர்வ விசாரணை அறிக்கை
தெரிவித்தது. ஆனால் பல டசின் கணக்
கானவர்கள் அல்லது நூற்றுக்கு மேற்பட்
டவர்கள் கொலைசெய்யப்பட்டனர் என்று
சுயாதீன விசாரணையாளர்கள் கூறிவரு
கின்றனர்.
அன்றைய அரசியல்வாதிகளும் ஊடகங்
களும் படுகொலைகள் பற்றிய உண்மை
களை மூடி மறைத்தமை பின்னர் பெரும்
சர்ச்சைகளாக வெடித்தன.
ஒரு படுகொலை நிகழ்ந்தது என்ற உண்
மையை பாரிஸ் அரச சட்டவாளர் அலுவல
கம் 1999 இலேயே முதல் முறையாக உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டது.
பின்னர் 2012 இல் இந்தப் பொலீஸ் படு
கொலைகளை "இரத்தக் களரியான ஓர்
அடக்குமுறை" என்று முன்னாள் அதிபர்
பிரான்ஷூவா ஹொலன்ட் ஒப்புக்கொ
ண்டார்.
அறுபது ஆண்டுகள் நிறைவடையும் இத்
தினத்தில் பிரான்ஸ் அரசின் உத்தியோக
பூர்வமான மன்னிப்பை மக்ரோன் வெளி
யிடுவார் என்று பாதிக்கப்பட்ட அல்ஜீரியர்
களும் மனித உரிமை அமைப்புகளைச்
சேர்ந்தவர்களும் எதிர்பார்க்கின்றனர்.
*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*
............................................................
பிரான்ஸில் இருந்து தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம் தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.
தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு subscribers பண்ணுங்கள் !!*
உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .
👇
https://www.youtube.com/c/THAAIMAN
*நன்றி*
What's the Difference Between a Casino Slot and a Casino Slot? - Casino
ReplyDeleteCasino Slots and Video 토토 배당률 Poker · What's Titanium Plate the Difference Between A Casino Slot and a Casino Slot? · When 강원랜드슬롯머신 you play a game of your choice, 승인 전화 없는 꽁 머니 사이트 you're not k9win restricted