Header Ads

A16 : மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது பெண் தீயணைப்பு வீரரை மோதி தள்ளிய மகிழுந்து!



A16 நெடுஞ்சாலையில் மீட்டு பணி ஒன்றில் ஈடுபட்டிருந்த பெண் தீயணைப்புபடை வீரர் ஒருவரை மகிழுந்து ஒன்று மோதி தள்ளியுள்ளது.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை காலை Oise நகரில் இடம்பெற்றுள்ளது. காலை 7 மணி அளவில் இங்கு A16 நெடுஞ்சாலையில் வீதி விபத்து ஒன்று இடம்பெற்றதை அடுத்து, அப்பகுதி தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். வீதி விபத்து ஏற்பட்ட பகுதியை SANEF அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பகுதியை சுற்றி பாதுகாப்பு வலையம் அமைத்தனர்.

காலை 7.45 மணி அளவில் மற்றுமொரு விபத்து அதே பகுதியில் இடம்பெற்றுள்ளது. மகிழுந்து ஒன்று அதிவேகமாக வந்து, தடை செய்யப்பட்ட பாதுகாப்பு வலையத்துக்குள் பாய்ந்தது.

இதில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் தீயணைப்பு படை வீரர் ஒருவர் பலத்த காயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமானைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த இரு விபத்துக்களிலும் மொத்தமாக ஐவர் காயமடைந்துள்ளனர். இதில் இரண்டாவது விபத்தை ஏற்படுத்திய பெண் சாரதி உலங்குவானூர்தி மூலம் Amiens மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*

............................................................

பிரான்ஸில் இருந்து  தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம்  தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.

 தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு  subscribers பண்ணுங்கள் !!*

உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .

👇

https://www.youtube.com/c/THAAIMAN

*நன்றி*



No comments

Powered by Blogger.