Header Ads

Saint-Denis : சரமாரி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சாவு! - மேலும் இருவர் காயம்!

 



தன்கிழமை இரவு Saint-Denis (93) நகரில் இடம்பெற்ற சரமாரி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

அவரச இலக்கத்துக்கு கிடைக்கப்பட்ட அழைப்பின் பேரில் இரவு 10.07 மணிக்கு சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். rue du Landy வீதியில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. பல்வேறு தடவைகள் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதோடு பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

துப்பாக்கிச்சூட்டில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் சாவடைந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைன நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் 19 மற்றும் 25 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து 7.62 மி.மீ துப்பாக்கி ரவையின் கோதுகள் மீட்க்கப்பட்டுள்ளன. விசாரணைகளை BAC 93N பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*

............................................................

பிரான்ஸில் இருந்து  தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம்  தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.

 தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு  subscribers பண்ணுங்கள் !!*

உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .

👇

https://www.youtube.com/c/THAAIMAN

*நன்றி*


No comments

Powered by Blogger.