Header Ads

இன்று தரிப்பிட கட்டணம் இல்லை! - இல் து பிரான்சுக்குள் புதிய வேகக்கட்டுப்பாடு..!



பரிஸ் உட்பட இல் து பிரான்சுக்குள் புதிய சுற்றுச்சூழல் மாசு நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.

இல் து பிரான்சுக்குள் வளிமண்டலத்தில் பரவியுள்ள அதிகபட்ச தூசு காரணமாக பொதுமக்கள் அவதானத்துடன் நடந்துகொள்ளும் படியும், முடிந்தவரை வாகங்கள் செலுத்துவதை தவிர்க்கும் படியும் கோரப்பட்டுள்ளனர்.

இன்று இல் து பிரான்சுக்குள் உள்ள குடியிருப்பு தரிப்பிடங்கள் அனைத்தும் கட்டணங்களற்ற இலவச சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 130 கி. மீ வேகம் கொண்ட நெடுஞ்சாலைகளுக்கு அதிகபட்ச வேகம் மணிக்கு 110 கி. மீ எனவும்,

110 கி. மீ வேகம் கொண்ட சாலைகளுக்கு அதிகபட்ச வேகம் 90 கி. மீ எனவும்,

90 கி. மீ வேகம் கொண்ட சாலைகளுக்கு அதிகபட்சமாக 70 கி. மீ வேகமாகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறைந்த காற்று வீச வாய்ப்புக்கள் உள்ளதால், எளிதில் நோய்க்குள்ளாகும் பலவீனமுடையவர்கள் வெளியே செல்வதை தவிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*

............................................................

பிரான்ஸில் இருந்து  தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம்  தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.

 தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு  subscribers பண்ணுங்கள் !!*

உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .

👇

https://www.youtube.com/c/THAAIMAN

*நன்றி*


No comments

Powered by Blogger.