Essonne : காவல்துறையினரை இலக்கு வைத்து அச்சுறுத்தல்!
காவல்துறை அதிகாரிகளுக்கு மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Essonne மாவட்டத்தின் Vigneux-sur-Seine நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் காவல்துறையினரின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. மொத்தமாக 15 அதிகாரிகளின் பெயர்கள் இவ்வாறு எழுதப்பட்டு அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
rue Pierre-Brosselette வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றிலேயே இந்த பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. அனைத்து அதிகாரிகள் சார்பாகவும் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், Alliance Police Nationale de l'Essonne தொழிற்சங்கம் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
Essonne மாவட்டத்தில் அண்மைய நாட்களில் இதுபோன்று காவல்துறையினருக்கு எதிராக அச்சுறுத்தல் விடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷*
*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*
............................................................
பிரான்ஸில் இருந்து தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம் தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.
தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு subscribers பண்ணுங்கள் !!*
உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .
👇
https://www.youtube.com/c/THAAIMAN
*நன்றி*
No comments