🔴 இன்று இல் து பிரான்சுக்குள் அதிகூடிய சூழல் மாசடைவு! - எச்சரிக்கை!
இன்று வியாழக்கிழமை இல் து பிரான்சுக்குள் அதிகளவில் சுற்றுச்சூழல் மாசு பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இல் து பிரான்சுக்குள் சுற்றுச்சூழல் அவதானிப்பாளர்களான Airparif இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வளி குறைவு காரணமாக இந்த வளிமண்டல மாசு ஏற்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை பரிஸ் மற்றும் இல் து பிரான்சுக்குள் வசிப்பவர்கள், முடிந்தவரை வெளியே செல்வதை தவிர்க்கும் படியும், குறிப்பாக அதிக போக்குவரத்து நெரிசல் நிலவும் பகுதிகளை முற்றாக தவிர்க்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, எளிதில் உடல்நலக்குறைவுக்கு உள்ளாகும் பலவீனமுடையவர்கள் வெளியில் செல்வதை முற்றாக தவிர்க்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷*
*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*
............................................................
பிரான்ஸில் இருந்து தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம் தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.
தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு subscribers பண்ணுங்கள் !!*
உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .
👇
https://www.youtube.com/c/THAAIMAN
*நன்றி*
No comments